Friday, 10 July 2015

ஆபாச இணையதளங்கள் முடக்கப்படும்: மத்திய அரசு உறுதி!

ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வஸ்வானி என்ற வழக்குரைஞர், ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்க உத்தரவிடக் கோரி, மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உச்ச […]

ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் வஸ்வானி என்ற வழக்குரைஞர், ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்க உத்தரவிடக் கோரி, மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு விசாரித்துள்ளது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஆபாச இணையதளப் பக்கங்களை முடக்குவதற்கான சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த போதிலும், மத்திய அரசு அதிக அக்கறை கொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
பின்னர் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிட்டர் ஜெனரல், ஆபாச வலைதளப் பக்கங்களை முடக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று உறுதியளித்துள்ளார்.

Subscribe to get more videos :