Wednesday, 1 July 2015

மெட்ரோ ரெயில் நிலையங்களில் செல்போனில் புகைப்படம் எடுக்க தடை: பயணிகள் அதிருப்தி

Chennai: : A Metro train during a trial run between Koyambedu and Ashok Nagar in Chennai on Saturday. PTI Photo by R Senthil Kumar (PTI2_15_2014_000067B)

சென்னையில் நேற்று கோயம்பேடு-ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை 7 ரெயில் நிலையங்கள் உள்ளன. முதல் நாளான நேற்று முன்தினம் 7 ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் செல்போனில் புகைப்படம் எடுக்க அனுமதியளிக்கப்பட்டது.
ஆனால் நேற்று முதல், ரெயில் நிலையங்களில் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடைவிதித்துள்ளனர்.
அப்படி மீறி வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பவர்களை அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இதனால் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

Subscribe to get more videos :