ஜியோனி நிறுவனம் மாரத்தான் எம்4 எனும் புதிய ஸ்மார்ட்போனினை
வெளியிட்டுள்ளது. இம்முறை அதிக நேரம் பேக்கப் வழங்கும் திறன் கொண்ட 5000
எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. அதன் படி ஜியோனி மாரத்தான்
எம்4 கருவி அதிகபட்சம் 50 மணி நேர டாக்டைம் மற்றும் 440 மணி நேர ஸ்டான்ட்பை
வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்களை பார்க்கும் போது மாரத்தான் எம்4 கருவியில் 1.3
ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் 64-பிட் பிராசஸர், 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல்
மெமரியும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதோடு 4ஜி சப்போர்ட் செய்யும் என்றும் ஓடிஜி சேவையும் வழங்கப்பட்டுள்ளது.
டிஸ்ப்ளேவை பொருத்த வரை 5 இன்ச் எச்டி ஏஎம்ஓஎல்ஈடி ஸ்கிரீன் மற்றும்
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் அமிகோ 3.0 யூஸர் இன்டர்ஃபேஸ், 8 எம்பி ப்ரைமரி
கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும்
வழங்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட இந்த கருவி கருப்பு
மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைப்பதோடு ரூ.15,499க்கு கிடைக்கின்றது.
Gionee Marathon M4 Phone Released in India- price in india Rs15,499