புதிய மோட்டோ ஜி (2015) ஜென் 3 ஜூலை மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என்கின்றது பிரேஸில் நாட்டு இணையதளமான டெக்முன்டோ. இது குறித்து டெக்முன்டோ தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை தொடர்ந்து பாருங்கள்..
புதிய மோட்டோ ஜி (2015) கருவி இந்திய விலை ரூ.18,100 ஆக இருக்கும் என்பதோடு, ஒரே நாளில் அமெரிக்காவிலும் இந்த கருவி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கருவி வாட்டர் ப்ரூஃப் மற்றும் IPx7 ரேட்டிங் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களில் இந்த கருவி 5 இன்ச் 720பி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 410 குவாட்கோர் பிராசஸர் 4ஜி எல்டிஈ, 1ஜிபி ரேம், 8ஜிபி மெமரி, 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி செல்பீ கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளம் மூலம் இயங்கும் என்று கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் மோட்டோ ஜி ஜென் 2 விலை குறைக்கப்பட்டிருப்பது தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும்