Wednesday, 1 July 2015

தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசை- 40 வயது பிரிட்டிஷ் காமெடியன் ரஸ்ஸல்

Russell Brand  Wants  'Marry' With Bollywood Actress Deepika Padukone

மும்பை: மத்திய அரசின் சிரிப்பு விழா நிகழ்ச்சி (2015) பெங்களூரில் ஜூன் 27 ம் தேதி நடைபெற்றது, இதில் பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்ட்டும் கலந்து கொண்டார். 40 வயதான பிரிட்டிஷ் காமெடியன் ரஸ்ஸல் பிராண்ட் இந்தி நடிகை தீபிகா படுகோனை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசைபடுவதாகக் கூறினார். நான் இந்தியாவில் இருந்தால் அவரை நிச்சயம் காதலித்து திருமணம் செய்து கொள்வேன் ,என்று ரஸ்ஸல் கூறியதைக் கேட்டு அங்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் இன்று இரவுக்குள் நான் கைது செய்யப்படவில்லை என்றால் நான் கண்டிப்பாக சென்று தீபிகாவைப் பார்ப்பேன், உங்கள் யாரிடமாவது தீபிகாவின் தொலைபேசி எண் இருந்தால் கண்டிப்பாகக் கொடுங்கள் இன்று மாலைக்குள் நான் அவருக்கு போன் செய்து பேசுகிறேன். என்று அங்கு வந்திருந்தவர்களிடம் கேட்டு பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டார் 40 வயது நிரம்பிய இந்தக் காமெடியர். ரஸ்ஸல் 2010 ம் ஆண்டு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேட்டி பெரி என்றப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்திப் படங்களை விடவும் இந்த திருமணத்தின் ஆயுள் மிகக் குறைவாக இருந்ததாக சிரித்துக் கொண்டே மற்றவர்களிடம் சொல்லி இருக்கிறார் ரஸ்ஸல் பிராண்ட். இந்த சிரிப்பு விழாவானது மூன்று நாட்கள் இந்தியாவில் நடைபெற்றது, ஜூன் 26 டெல்லியிலும், ஜூன் 27 பெங்களூரிலும் , ஜூன் 28ல் இறுதியாக மும்பையிலும் நடந்து முடிந்தது. இதில் கலந்து கொண்ட பெரும்பாலோனோர் நிகழ்ச்சி நன்றாக இருந்ததாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

Subscribe to get more videos :