அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஸ்கைடைவிங்கிற்கு பயன்படுத்தப்படும் சிறிய ரக விமானம் ஒன்று எரிபொருள் தீர்ந்து போனதால், கடந்த ஞாயிறு அன்று காலை 10.30 மணியளவில் பரபரப்பான சாலையில் அவசரமாக தரையிறங்குவது அப்பகுதியில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த விமானத்தில் விமானி உட்பட 5 பேர் இருந்துள்ளனர். பல கார்கள் சென்றுகொண்டிருந்த நிலையில் விமானி மிகவும் சாமர்த்தியமாக தரையிறக்கி உயிரிழப்பை தவிர்த்துள்ளார். விமானிக்கு மட்டும் கையில் சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.
பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் அந்த வீடியோ இதோ..