வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் சூரி.
ஆனால், சந்தானத்தின் ஆதிக்கத்தால் சூரியால் முதல் இடத்திற்கு வர முடியாமல்
இருந்தது.தற்போது சந்தானம் ஹீரோ ட்ராக்கில் இறங்கி விட்டதால், சூரி
காட்டில் அடை மழை தான். முன்பெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்
வாங்கி வந்தாராம்.இன்றைய தேதியில் சூரி ஒரு நாளைக்கு ரூ 7 லட்சம் வாங்கி
வருவதாக கூறப்படுகின்றது. மேலும், அஜித், சிம்பு, சூர்யா என முன்னணி
நடிகர்களின் படங்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.