வசூலில் சாதனை படைத்து வரும் பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமவுலியின்
தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத். எழுத்தாளரான இவர்தான் பாகுபலி கதையை
எழுதியவர்.
இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள பாகுபலி படம்
உருவாக முக்கிய காரணமான விஜயேந்திர பிரசாத் சமீபத்தில் ஒரு விழாவில் நடிகர்
ரஜினிகாந்தை சந்தித்தார்.
இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ரஜினி, பாகுபலி
படம் பிரமாதமாக இருக்கிறது என்று பாராட்டி விஜயேந்திர பிரசாத்துக்கு
பொன்னாடை போர்த்தினார். அப்போது, அடுத்து ரஜினியை வைத்து படம் எடுப்பது
குறித்து பேசியதாக தெரிகிறது.
இதுகுறித்து விஜயேந்திர பிரசாத்திடம் கேட்ட போது, ரஜினிசார் எனக்கு ஒரு
படம் நடித்து தர இருக்கிறார். நான் கதை எழுதி இயக்குவேன். இது என்
விருப்பம். இதற்கு ரஜினி சம்மதித்து இருக்கிறார்.
இவ்வாறு விஜயேந்திர பிரசாத் கூறினார்.