Tuesday, 25 August 2015

விற்பனைக்கு வரும் தானியங்கி ‘பறக்கும்’ கார்..!! Flying Car

கூகுள் நிவிறுவனம் ஓட்டுனர் இல்லாமல் தானாகவே இயங்கும் கார்களை தயாரித்து பல வித சோதனைகளை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இங்கு உலகமே வியக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டு இன்னும் சில ஆண்டுகளில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் வேணாம், நல்லா வெயில் அடிச்சா போதும்..!
ஒட்டு மொத்த உலகமே வியக்க வைக்கும் இந்த தொழில்நுட்பமானாது மனிதர்கள் பயணம் செய்யும் முறையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. அவ்வாறு உலக மக்களை வியப்பில் ஆழ்த்த இருக்கும் புதிய தொழில்நுட்பம் குறித்த விரிவான தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

பறக்கும் ஏரோமொபைல் நிறுவனத்தின் புதிய கார் தரையில் இயங்குவது மட்டுமின்றி பறக்கவும் செய்யும்.
கார் இந்த கார் பறக்கும் போது தாணியங்கி முறையில் இயங்கும் என்பது தான் இதன் சிறப்பம்சம்.
சோதனை இந்த பறக்கும் கார் 2014 ஆம் ஆண்டு முதல் சோதனை செய்யப்பட்டு வருவதோடு 2017 ஆம் ஆண்டு விற்பனைக்கு அளிக்க திட்டமிட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
தொழில்நுட்பம் முற்றிலும் அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பறக்க பக்கபலமாக இருக்கும் இறக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் இதனால் கார் தரையில் இருந்து பறப்பது மற்றும் தரையிறங்குவது எளிமையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
விலை இன்னும் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் பல சோதனைகள் நடைபெற்று வருவதால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மாற்றம் தற்சமயம் சோதனைகளில் இருப்பதால் ஏரோமொபைலில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு தற்சமயம் சோதனைகளில் இருக்கும் இந்த தொழில்நுட்பம் சந்தையில் பயன்பாட்டிற்கு வரும் நாட்களை உலகமே எதிர்நோக்கி காத்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.


விற்பனைக்கு வரும் தானியங்கி ‘பறக்கும்’ கார்..!! Flying Car

Subscribe to get more videos :