ஒப்போ நிறுவனம் ஆர்5 கருவியின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலினை அறிமுகம் செய்திருக்கின்றது. அதன்படி புதிய ஒப்போ ஆர்5எஸ் கருவியானது இந்தியாவில் ரூ.15,200க்கு வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது. 4.85 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவி க்ரே நிறத்தில் காணப்படுகின்றது. இந்தியர்கள் கையில் ஐபோன், இது தான் நடக்கும்..!?
சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே 1080*1920 பிக்சல் ரெசல்யூஷன், 64-பிட் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய நிறுவனம்..!! ஒப்போ ஆர்5எஸ் கலர் ஓஎஸ் 2.0.1 சார்ந்த ஆண்ட்ராய்டு கிட்காட் 4.4 மூலம் இயங்குவதோடு வை-பை, ப்ளூடூத், GPRS/ EDGE, 4ஜி மற்றும் மைக்ரோ யுஎஸ்பி கொண்டிருப்பதோடு 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் 2000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.