ஜெமினி படம் போன்று மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்டில் விக்ரம் தற்போது நடித்துள்ள
படம் பத்து எண்றதுக்குள்ள. இப்படத்தில் நூறு சதவிகிதம் தன்னை கமர்சியல்
ஹீரோவாக சித்தரிக்கும் கதையில் நடித்துள்ள விக்ரம், இதுவரை இல்லாத அளவுக்கு
ஆக்சன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார்.
ஷங்கரின் ஐ படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கும் இந்த படத்துக்காக
100 நாட்களுக்கு மேல் கால்சீட் கொடுத்து நடித்து வந்த விக்ரம், பத்து
எண்றதுக்குள்ள படப்பிடிப்புக்காக நேபாளம் சென்று திரும்பிய நேரத்தில் அங்கு
ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சில மாதங்களாக அதிர்ச்சியில் இருந்து மீளாமல்
இருந்தார்.
அதனால் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைகூட தள்ளி வைத்து பின்னர் சகஜ
நிலைக்கு திரும்பிய பிறகு படமாக்கினார் விஜய் மில்டன்.அதையடுத்து கடந்த 2
மாதங்களாக இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் படத்தை தரமாக
கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் விஜய்மில்டன், அவ்வப்போது ஏதாவது
திருத்தங்களை செய்து கொண்டே வருகிறாராம்.
இருப்பினும், திட்டமிட்டபடி செப்டம்பர் 2-ந்தேதி பத்து எண்றதுக்குள்ள
படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்று தற்போது வேலைகளை அவசரகதியில்
முடுக்கி விட்டிருக்கிறாராம் அவர்.