பிரஷாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும படம் ‘சாஹசம்’.
இப்படத்தில் பிரஷாந்துக்கு ஜோடியாக அமண்டா என்ற புதுமுகம் நடிக்கிறார்.
மேலும், நாசர், தம்பி ராமைய்யா, சோனுசூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய்,
ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தை அருண்ராஜ் வர்மா
என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்.
பிரஷாந்தின் தந்தையும் இயக்குனருமான தியாகராஜன், இப்படத்திற்கு கதை,
திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல்களுக்கு தமன்
இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களுக்காக மிகவும் கவனம் செலுத்தி
இசையமைத்துள்ளார் தமன்.
இப்படத்துக்காக கிட்டத்தட்ட 6 மாத காலம் ஆராய்ச்சி எல்லாம் மேற்கொண்டு
இசையமைத்துள்ளாராம். மேலும், இப்படத்தின் பாடல்களை அனிருத், சிம்பு, மோஹித்
சவுஹான், ஸ்ரேயா கோஷல், லஷ்மி மேனன், ஆண்ட்ரியா என மிகப்பெரிய
நட்சத்திரங்களை வைத்து பாடவைத்துள்ளார். இப்பாடல்கள் வெளிநாடுகளில்
பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிட முடிவு
செய்துள்ளனர். அதன்படி, இந்த போஸ்டரை நடிகர் சிம்பு நாளை மாலை 7 மணிக்கு
வெளியிடவுள்ளார்.