Thursday, 12 November 2015

320 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ப்ளூ மூன் வைரம்

93c62106-cb22-4ebb-add7-d2fbdfa02ddd_S_secvpf

வைரங்களில் மிக அரிதாகவே கிடைக்கும் ஒன்றான ப்ளூ டைமண்டை ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள சோத்பே ஏல நிறுவனம் 48.5 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த வைரக்கல், 35 முதல் 55 மில்லியன் டாலர்கள் வரை ஏலம் போகும் என இந்நிறுவனம் முன்னர் எதிர்பார்த்தது.
29.6 காரட் மதிப்புள்ள இந்த வைரம், ப்ரிடோரியா (PRETORIA) நகருக்கு அருகேயுள்ள கல்லினன் (CULLINAN) வைரச் சுரங்கத்தில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் தோண்டி எடுக்கப்பட்டது. சுமார் 6 நாட்களுக்கு பிறகு, தலைசிறந்த முறையில் பிளக்கப்பட்ட இந்த வைரத்திற்கு ‘ப்ளூ மூன்’ என்று பெயர் சூட்டப்பட்டது.
குறைபாடில்லாத இந்த வைரம் ஜெனிவாவில் உள்ள சோத்பே ஏல நிறுவனத்தில் நேற்று ஏலம் விடப்பட்டது. கடும் போட்டிக்கிடையே, ஏலக் கட்டணத்துடன் சேர்த்து 48.4 மில்லியன் டாலர்களுக்கு(இந்திய மதிப்பில் 320 கோடியே 45 லட்ச ரூபாய்) இந்த வைரம் ஏலம் போகியுள்ளது.
5 வருடங்களுக்கு முன்பாக தி கிராஃப் பிங் என்ற வைரம் 46 மில்லியன் டாலருக்கு விலை போனதே இதுவரை வைர ஏலத்தில் சாதனையாக இருந்த நிலையில், ப்ளூ டைமண்ட் 48.4 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

Subscribe to get more videos :