’Modi Effect’ என்ற புத்தகத்தை எழுதிய இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளர், பணம் வாங்கி கொண்டுதான் அந்த புத்தகத்தை எழுதியதாக பேட்டியளித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொது தேர்தல் முடிவுற்றதும், ’Modi Effect’ என்ற புத்தகம் ஒன்றை பிரித்தானிய பிரதமரின் முன்னாள் ஊடக ஆலோசகரும் பி.பி.சி. முன்னாள் செய்தியாளருமான லேன்ஸ் பிரைஸ் எழுதியுள்ளார்.

பின்னர், கடந்த 2015ம் ஆண்டு தொடக்கத்தில் அந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், லண்டன் டைம்ஸ் பத்திரிகையில் பேட்டி அளித்த லேன்ஸ் பிரைஸ், இந்த புத்தகம் எழுதுவதற்காக, எனக்கு பணம் அளிக்கப்பட்டது.
அதற்கு முன்பு நரேந்திர மோடியை பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது. மோடிக்கு நெருக்கமானவர் ஒருவர் என்னை அணுகியதால் பணம் வாங்கிக் கொண்டு அந்த புத்தகத்தை எழுதினேன்.
மேலும், பணம் மொத்தமாக எனக்கு அளிக்கப்படவில்லை, இந்தியா வருவதற்கான விமானக் கட்டணம், தங்குமிடத்துக்கான செலவு போன்றவை செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதற்காக அவர் 4 முறை இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேரத்தில் இந்த பேட்டி வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.