Monday, 29 June 2015

சிறுமியை வழிமறித்து பலாத்காரம் செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

1402123382-6825

ஒடிசா மாநிலம், சுந்தர்கர் மாவட்டம், பிஸ்ரா நகரையொட்டியுள்ள காட்டுப்பகுதி அருகே சிறுமியை வழிமறித்து பலாத்காரம் செய்ததாக ஒரு சிறுவன் உள்பட மூன்று பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை தோழியின் வீட்டுக்கு சென்றுவிட்டு தனியாக வந்துகொண்டிருந்த அந்த சிறுமியை இந்த மூன்று பேரும் சேர்ந்து வழிமறித்து காட்டுப்பகுதிக்குள் தூக்கிச் சென்றனர். அங்கு அந்த சிறுவன் உள்பட மூன்று பேரும் மாறி, மாறி பலாத்காரம் செய்த பின்னர் இங்கு நடந்ததை வெளியே யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்று விடுவோம் என்று மிரட்டி அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரையடுத்து குற்றவாளிகளை தேடிவந்த போலீசார் இன்று அந்த மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். நாளை இளம்சிறார் கோர்ட்டில் அந்த சிறுவனையும், சுந்தர்கர் மாவட்ட நீதிபதியின் முன்னர் மற்ற இருவரையும் ஆஜர்படுத்தப் போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Subscribe to get more videos :