உத்தரபிரதேசம் கான்பூர் அருகே உள்ளது பிபரி கிராமம் இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராம் அதூர் இவரது நண்பர் தினேஷ் இருவரும் சம்பவத்தன்று ராம் அதூர் வீட்டு அருகே மது குடித்தனர் பின்னர் ராம் அதூர் வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். ராம் அதூரின் மனைவி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். தினேஷ் நைசாக சென்று அவரை எழுப்பி அவரிடம் பேச்சு கொடுத்து உள்ளார்.
பின்னர் நண்பனின் மனைவி என்றும் பாராமல் அவரை கற்பழிக்க முயற்சி செய்து உள்ளார். அந்த பெண் தினேசின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தனது ஆசை நிறைவேறாத காரணத்தால் கோபம் அடைந்த தினேஷ் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை அந்த பெண் மீது ஊற்றி தீவைத்து விட்டு ஓடி விட்டார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்து வந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அங்கு அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பெண்ணின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக் கூறப்படுகிறது.ராம் அதூர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை தேடி வருகின்றனர்.