Monday, 29 June 2015

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் சிறுமியின் உறுப்பில் மிளகாய் பொடி தூவிய வளர்ப்பு தாய்

201506271342324768_Mother-punishes-foster-daughter-for-bedwetting-by-putting_SECVPF

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ளது பிதான் பள்ளி குடியிருப்பு இந்த குடியிருப்பில் வசித்து வருபவர் ஷியாமள்சென் இவரது மனைவி சந்த்யா. தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லாததால் இவர்கள் 6 வயது சிறுமி ஒருவரை தத்து எடுத்து வளர்த்து வந்தனர். சிறுமிக்கு படுக்கையில் சிறு நீர் கழிக்கும் பழக்கம் இருந்த வந்து உள்ளது பல முறை கூறியும் சிறுமியின் பழக்கத்தை திருத்த முடிய வில்லை.
இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி படுக்கையில் சிறு நீர் கழித்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த சிறுமியின் வளர்ப்பு தயார் சிறுமியை திட்டி அடித்து உதைத்ததுடன் சிறுமியின் உறுப்பில் மிளகா பொடியை திணித்து உள்ளார்.இதில் சிறுமி வலியால் துடித்து உள்ளார்.
இது குறித்து வீட்டருகில் வசித்தவர்கள் மாவட்ட குழந்தை நல குழுவுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர் அவர்கள் வந்து குழந்தையை மீட்டு ஆர்ஜி அகர் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். டாக்டர்கள் சிறுமியின் நிலமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறி உள்ளனர்.தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிறுமி மனதளவில் பெரிதும் பாதிகப்பட்டு உள்ளார்.சிறுமி பேச மறுக்கிறார் அவருக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் உறவினர் பூர்ணிமா தாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஷியாமள்சென்னையும் அவரது மனைவி சந்த்யாவையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி 14 நாள் காவலில் வைத்து உள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமியின் தந்தை சிறுமி குழந்தையாக இருந்த போதே இறந்து விட்டார். அவரது தாயாரும் எங்கோ சென்று விட்டார் சிறுமியை அவரது உறவினர் பூர்ணிமா தாஸ் தான் வளர்த்து வந்தார். ஷியாமள் சென்னும்- சந்தியாவும் தங்களுக்கு தத்து கொடுக்குமாறு கூறி குழந்தையை வாங்கி சென்று உள்ளனர். ஆனால் அவர்கள் சட்டபடி தத்து எடுக்க வில்லை அவர்களிடம் அதற்குரிய ஆவணங்களும் இல்லை என்று கூறினர்.
இது குறித்து உளவியல் நிபுணர் அனிண்டிதா ராய் சவுத்ரி கூறும் போது படுக்கையில் சிறு நீர் கழிப்பது என்பது மிகவும் நுட்பமான பிரச்சினை. பெரும்பாலும் இந்த விஷயத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் சில தவறான நடைமுறைகளை பின்பற்று கின்றனர்.இந்த தாயாரை உளவியல் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் இவரிடம் பிறருக்கு துனபம் கொடுத்து இன்பம் அனுபவிக்கும் கொடிய பழக்கம் இருப்பதாக் தெரிகிறது என கூறினார்.

Subscribe to get more videos :