Monday, 29 June 2015

கணவரால் பாலியல் தொழில் செய்வோரிடம் விற்கப்பட்ட தமிழ்ப் பெண்: பொலிசார் மீட்பு

Sad young woman sitting on the bed
கணவரால் ரூ.30 ஆயிரத்துக்கு பாலியல் தொழில் செய்வோரிடம் விற்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
பெங்களூரில் 4 ஆண்டுகளுக்கு முன்பு, 26 வயதான தமிழக பெண், தனது சகோதரனின் நண்பரான நரசிம்மா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், நரசிம்மா, தனது மனைவியை வீட்டு வேலை செய்வதற்காக அவரது நண்பர் கிருஷ்ணாவின் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு கிருஷ்ணா, பாலியல் தொழில் நடத்தி வரும் நபர்களிடம் ரூ.30 ஆயிரத்துக்கு அப்பெண்ணை விற்றுள்ளார்.
தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த அப்பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அங்கு வந்த ஒருவரிடம் அப்பெண் எடுத்துக் கூற, அவர் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் காவல்துறை உதவியுடன் அப்பெண்ணை மீட்க உதவியுள்ளார்.
இந்த சம்பவத்தில், அப்பெண்ணின் கணவர் நரசிம்மாவையும், பாலியல் தொழிலில் மனைவியை விற்பனை செய்ய உதவிய நண்பர் கிருஷ்ணாவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Subscribe to get more videos :