Tuesday, 25 August 2015

அட!! என்று ஆச்சர்யப்பட வைக்கும் உலகின் விசித்திர நீச்சல் குளங்கள்


அண்மையில் நூற்றிப் பத்து அடி உயரத்தில், இருபத்தைந்து மீட்டர் நீளத்திலும், ஐந்து மீட்டர் அகலத்திலும், மூன்று மீட்டர் ஆழமும் கொண்ட கண்ணாடி நீச்சல் குளத்தை இரு பத்தடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு இடையே நவீனகால என்ஜினீயர்கள், அருமையாக உருவாக்கியிருந்த செய்தியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அந்த வகையில், நியூ ஜெர்சியில் உள்ள முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர், தனது வீட்டில் வயலின் வடிவத்தில் வித்தியாசமான ஒரு நீச்சல் குளத்தை அமைத்துள்ளார். இது மட்டுமல்லாமல், 57 மாடிகள் கொண்ட சிங்கப்பூரின் பே சேன்ஸ் ஹோட்டலின் மொட்டை மாடியில் அமைந்துள்ள நீச்சல்குளம், பாலியில் உள்ள உபுட் ஹோட்டலில் காட்டு மரங்களை விட உயரத்தில் உள்ள நீச்சல் குளம், ஆஸ்திரேலியாவின் பாண்டி கடற்கரையில் உள்ள ஐஸ்கட்டி நீச்சல் குளம் என்று நம்மை வியக்க வைக்கும் நீச்சல் குளங்கள் எக்கச்சக்கமாக இருப்பது ஆச்சர்யமாகவும், அற்புதமாகவும் இருக்கிறது.

Subscribe to get more videos :