Tuesday, 25 August 2015

கர்ப்பபை புற்று நோயால் பெண் உயிரிழப்பு: வயதை காரணம் காட்டி சோதனைக்கு மறுப்பு தெரிவித்ததால் விபரீதம்

rachel_dies_002

கர்ப்பபை புற்று நோயால் அவதிப்பட்டு வந்த இளம்வயது பெண் ஒருவருக்கு ஸ்மியர் சோதனைக்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவின் ப்ளேக்பூல் பகுதியைச் சேர்ந்தவர் ரேய்ச்சல், 24 வயதான இவருக்கு கர்ப்பபை புற்று நோய் இருப்பதாக தெரிய வந்தது.
20 மாதமேயான குழந்தைக்கு தாயான ரேய்ச்சல், புற்று நோயின் பிடியில் இருந்து தாம் மீண்டு வருவதாக பெரிதும் நம்பிக்கையுடன் இருந்தார்.
இந்நிலையில் ரேய்ச்சலுக்கு ஸ்மியர் சோதனை மேற்கொண்டால் பிழைக்கும் வாய்ப்பு உள்ளதென மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஸ்மியர் சோதனை 25 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கே நடத்த சட்ட விதிகள் இருப்பதால் ரேய்ச்சல் விவகாரத்தில் அது கடுமையான ஏமாற்றத்தை தந்துள்ளது.
இந்நிலையில் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் ஸ்மியர் சோதனை நடத்த ரேய்ச்சலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் உரிய நேரத்தில் அனுமதி கிட்டாததால் புற்று நோயின் தாக்கம் அதிகரித்த நிலையில் ரேய்ச்சல் உயிரிழந்துள்ளார்.
மனிதாபிமானமின்றி சட்டத்திட்டங்களையே உறுதியாக பின்பற்றும் நிலை மாற வேண்டும் எனவும், இது போன்ற நிலை இதர பெண்களுக்கு நேரவேண்டாம் என போராட்டத்தில் ரேய்ச்சலின் குடும்பத்தினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.
பிரித்தானியா முழுவதும் ஆண்டிற்கு 3 ஆயிரம் பேர் கர்ப்பபை புற்று நோயால் பாதிப்படைந்து வருகின்றனர், இது பெண்களை மட்டும் தாக்கும் புற்று நோயில் 2 சதவிகிதமென்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to get more videos :