தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘திருடா திருடி’ படத்தின் மூலம் தமிழ்
சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் சாயாசிங். இப்படத்தில் இடம்பெற்ற
மன்மதராசா பாடலில் இவரும், தனுஷும் சேர்ந்து ஆடிய குத்தாட்டம், இவரை
பட்டிதொட்டியெங்கும் பரவச் செய்தது.
அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்தவர், ‘அருள்’,
‘திருப்பாச்சி’ ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினர். பின்னர்,
கடந்த 2012-ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் கிருஷ்ணாவை திருமணம்
செய்துகொண்டார்.
அதன்பின், உதயநிதி நடிப்பில் வெளிவந்த ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில்
உதயநிதிக்கு அக்காவாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, 2
ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ‘உள்குத்து’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி
கொடுக்கவுள்ளார் சாயா சிங். இந்த படத்தில் சாயாசிங்கின் கதாபாத்திரம்
மிகவும் வலுவானது என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இப்படத்தில் தினேஷ்-நந்திதா ஆகியோர் நடிக்கின்றனர். ‘திருடன் போலீஸ்’
படத்தை இயக்கிய கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். ஆக்ஷன், திரில்லர் என
அனைத்து அம்சங்களும் உள்ளடக்கியதாக இப்படம் உருவாகி வருகிறது.